மனமே

என் மனதே..
சோகம் - உன் சோகம்
சோர்வு நீங்காத் தாகம்.

உன் சிரிப்பு எத்தனை காலம்
உன் பிறப்பில் எத்தனை சாபம்

அடுத்தவன் மகிழ்ச்சியில் உனக்கும் ஓர் மகிழ்ச்சி..
அது அவன்முன் நடத்தும் போலி நிகழ்ச்சி..

உனக்குமட்டும் ஏன் இப்படி?
உன்னைமட்டும் சோகம் கண்டதெப்படி?

யாருக்கில்லை கவலை
யாருக்குமில்லை கவலை என்று தோணுவதெப்படி...

மனமே..
நீ சோகம் நிரம்பிய தவலை..
மொண்டு அருந்தி விழுங்கி என் ஆயுள் குறைக்கிறேன்..
கண்ணீர் வடித்து நிரம்பி உனக்கு அயுள் நீட்டிக்கிறேன்..

தோல்வியில்லை துன்பமில்லை
பிரிவில்லை இறப்பில்லை..
மனமே உனக்கு இழப்பில்லை..

எதையோ என்னிடம் மறைக்கிறாய்..
உன் மனப்பசிக்கு பலியாகிறேன்..
உன் மனருசிக்கு பாழாகிறேன்...
உனக்கு பக்குவமில்லாத உயிராகிறேன்...
-ஜாக்.

எழுதியவர் : ஜாக் (19-Apr-20, 8:54 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : maname
பார்வை : 1243

மேலே