ஏழை✍

ஏழை✍

பசி எங்கள் நிரந்திர நண்பன்.
காசு எங்கள் நிரந்திர எதிரி.
லட்சுமி எங்கள் வீட்டுக்கு வந்ததே இல்லை.
உழைப்பு எங்களை உயர்த்தவில்லை.
ஜான் ஏறினால் முழம் சறுக்கும் எங்கள் வாழ்க்கை
நித்திய கண்டம் பூரண ஆயுசு.
ஏழை நாங்கள் அரசியல்வாதிகளின் பகடை காய்கள்.
எங்கள் உண்மை வாய்பேச முடியாத ஊமை.
பல நாள் பட்டிணி
தினம் ஒரு வேளை சாப்பாடு
பழகி போன சமாச்சாரம்.
சுவையான சாப்பாடு எப்போது சாப்பிட்டோம்.
மறந்து போன விஷயம்.
யார் ஆண்டாலும்
எங்கள் வாழ்க்கை எப்போதுமே கேள்வி குறி தான்.
உழைப்பு எங்கள் உடன்பிறப்பு .
சோர்வு தீர "மது" எங்களுக்கு மா மருந்து.
அரசாங்கமே!
போதுமே லாக் டவுன்
வெறும் பானையை எவ்வளவு நாள் உருட்டுவது.
ஈர துனி எவ்வளவு நாள் தாங்கும்.
நிலைமை நீடித்தால் நாங்கள் இறந்து விடுவோம்.
அட திறந்து விடுங்கள் எங்கள் கூட்டை.
பசியால் சாவதை விட
உழைத்து ஒரு வேளை சாப்பிட்டு சந்தோஷமாக சாகிறோமே.
எங்களை இந்த நோய் தாக்காது.
வறுமையை விடவா இந்த நோய் கொடியது.
- பாலு.

எழுதியவர் : பாலு (20-Apr-20, 12:10 am)
சேர்த்தது : balu
பார்வை : 1510

மேலே