ஊரடங்கிய பொழுதுகள்

கொடுநோய்
உயிர் பயத்தில்
நாடடங்க,
ஊரடங்கிப்போனது.
ஊரடங்க,
குடியடங்கிப் போனது.
குடியடங்க,
நாம்மடங்கிப் போனோம்.
நம்மோடு....
நுகர்வடங்க
நட்படங்க- என
நல பட்டியல் நீளும்....
குடியடங்க
களவடங்க- என
மல பட்டியலும் சேரும்.
குணம் கண்டு
குற்றம் கண்டு
குறைபாட,
நிறை கூற
செல்லில் அடங்கிவிட்டோம்.
நம்மோடு...
பத்து ரீங் டோண்களை
ஒருசேர கேளாமல்,
காமுக உரசலை ஜாடைகட்டி காணாமல்,
கண்ஜாடை தந்திக்கு மொழி பெயர்ப்பு செய்யாமல்,
எறங்கு... எறங்கு...
ஏறு...
ஏறு...
போலாம் ரைட்...
சதா கேட்டு சலித்த போன சப்தங்கள் இல்லாமல்
அடங்கி போன பேருந்துகள்.
இப்படி பல உண்டு.......
நான் எதைச் சொல்ல????

எழுதியவர் : (20-Apr-20, 9:33 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 51

மேலே