ஊரடங்கிய பொழுதுகள்

ஊரடங்கிய பொழுதினிலே உயிரடங்கி போகலயே
காற்று தூய்மையாச்சி
கடலும் தூய்மையாச்சி
சாலைகள் சத்தமின்றி சுத்தமாச்சி
அங்கங்கே
அலரும் வாகனசத்தமில்லே
ஆர்ப்பாட்டம் போராட்டம் எதுவும் நடக்கவில்லே
கைத்தட்டினோம் விளக்குபிடித்தோம் எதுவும் முடியவமில்லே
ஏழைவாழ்வு விடியவமில்லே
நோய்வந்து சாகுமுன்னே
பசிவந்து கொல்லுமுன்னு
பார்த்தவக சொல்லவுமில்லே
ஊரடங்கும் பொழுதினிலே
என் உயிரடங்கி போகிறதே அதைக்கண்டுசெல்ல ஒரு நாதியுமில்லே

எழுதியவர் : (20-Apr-20, 9:32 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 37

மேலே