தன்னம்பிக்கை

எத்துணை அழகு அவள்
என்னவென்று சொல்லுவேன் அவளை
அத்தனை முத்தங்களும் அவளுக்கே
அவளின் சின்ன சின்ன குறும்பு தனம் குழந்தைகளை மிஞ்சும்...
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை
அவளை இன்னும் நேசிக்கிறேன்
மிகவும் ஆழமாய்.....
அவள் என்னோடு கலந்து
என் மூச்சு காற்றோடு மிதந்து
என் எண்ணங்களை மெருகேற்றி
என் விழிகளின் வழியே
என்னவளாய் என் உருவமாக
என் முன் கண்ணாடிகளில் இருப்பவள்
அவள் நான் தான்....

என்னை எனக்கு மிகவும் பிடிக்கும்
பல ஆண்டுகளுக்கு முன் வரை...

எழுதியவர் : உமா மணி படைப்பு (20-Apr-20, 9:27 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 107

மேலே