என் நாடு இந்தியா
தினசரி நாளிதழ் பிரிக்கையில்
கண்கள் தேடும் விளையாட்டு செய்திகளும்
சினிமா செய்திகளும் முன்பெல்லாம் எங்களுக்கு!
இன்றைய நாட்களில்
நாளிதழ் பிரிக்கையில்
ஒலிம்பிக் பதக்க பட்டியலை போல
கோரோனோ பாதிப்பு பட்டியல்
உலகம் முதல் உள்ளூர் வரை!
அப்போதெல்லாம் இந்தியா
பதக்க பட்டியலில் உள்ளடங்கியுள்ளதா
என்று ஆர்வமாய் அறிவோம் ஒலிம்பிக்கில்!
அதுவும்
வெண்கல பதக்கம் வெள்ளி பதக்கம்
மட்டும் கண்கள் தேடும்
பதக்க பட்டியலின் கீழ் முதல்!
அதன் பிறகு
மேல் முதல் மூன்று நாடுகள் பார்க்க
அமெரிக்கா அள்ளி குவித்திருக்கும் பதக்கங்களை
தங்கம் வெள்ளி என எண்ணிலடங்கா அளவில்!
இன்றும் பார்க்கிறோம் நாளிதழ்
அமெரிக்கா முதன்மையில் அவ்விடத்திலே!
ஆனால் இந்தியாவின் முன்னேற்றம்
சில படிகள் ஏறியிருக்கிறது என்பது
கண்ணீர் துளிகளை வரவழைக்கிறது இந்தியனுக்கு!
எங்களுக்கு தங்க பதக்கமும் வேண்டாம்;
தங்கி வேலை பார்க்க எந்த நாடுகளும் வேண்டாம்;
வைரஸ் தாக்குதலை அர்ரெஸ்ட் செய்துவிட்டால் போதும்;
வைராக்கியம் இனியாவது கொண்டு
பசுமை புரட்சி செய்ய கற்றுக்கொள்கிறோம்
என் மண்ணிலே! என் நாட்டிலே!
'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்'
என்னும் முண்டாசு கவிஞனின் கூற்றுப்படி
ஆற்றலை வெளிக்கொணருவோம் இந்திய மண்ணிலே!
-மன்னை சுரேஷ்