மருத்துவ வெண்பா – வெண்டுடிக்காய் - பாடல் 58

நேரிசை வெண்பா

கண்ட கிராணி கடிய அதிசாரம்
விண்டவெண் சீதரத்தம் மேவுங்காண் – ஒண்டொடியே!
வண்டற்காம் வெய்யகப வாதமிகும் வாய்க்குணமாம்
வெண்டுக்காய் உண்பார்க்கு விள். 58

மருத்துவ குண பாடம்

குணம்:

வற்றலுக்கு உதவியான வெண்டுக்காய்க்கு கிரகணி பேதி, சீத ரத்தாதிசாரம், சிலேட்டும வாதம், நாவுக்குரிசை ஆகிய இவைகள் உண்டாம்.

உபயோகிக்கும் முறை:

இதைப் பதார்த்த வகையிலொன்றாய் பாகப்படுத்தி பொரியலாக அல்லது துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டாகவும் செய்து அன்னத்துடன் சேர்த்து உண்ணலாம்.

இதனால் உட்சூடு, உஷ்ண இருமல் குணமாகும். கபம் விருத்தியாம். இது விந்துவைக் கட்டி உற்சாகத்தை உண்டாக்கும்.

இதன் வேரை நன்றாய்க் காய வைத்து இடித்துச் சூரணித்து வேளைக்கு கால் – அரை தோலா எடை காய்ச்சிய பாலில் போட்டுச் சாப்பிட விந்து நுங்கு போல் இறுகும்; போக சக்தி அதிகரிக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Apr-20, 3:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே