நட்பு

இதிகாச காலத்து நட்புக்கு
கண்ணன் சுதாமா
கர்ணன் துரியோதனன்
என்றால் ........
சரித்திர காலத்தில்
பிசிராந்தையார் கோப்பெரும்சோழன்
அதியமான் அவ்வை என்றிருக்க
கொஞ்சம் யோசிக்கவைத்தது
கலியுகம் ............
இந்த யுகத்தில் நட்பில் சூதே
சொல்லுது சரித்திர ஏடு......
எட்டப்பன் மீர் ஜாபர்
இவர்கள் நட்பிற்கு த்ரோகம் செய்தோர்
நாட்டையே வெளிநாட்டினருக்கு
தத்தம் செய்தவர்கள்!

அதனால் நல்ல நண்பனைத்தேடி பெரு
நல்ல நட்பு சக்கரத்தின் அச்சுபோல
நட்பு அச்சென்றால் நண்பன் சக்கரமாவான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Apr-20, 5:24 pm)
Tanglish : natpu
பார்வை : 770

மேலே