வட்டக்காந்தமே
காந்தத்துகள்களாகி உனக்காக காத்துக்கிடக்கிறேன்...
உன் ஈர்ப்பைக் கண்டு பயந்து வேர்த்துக்கிடக்கிறேன்...
வட்டக்காந்தமே...
என் உறவுக்கல்லே..
ஈர்ப்பின் இதிகாசமே..
நீ மண்ணையும் ஈர்க்கிறாய்...
என்னையும் ஈர்க்கிறாய்...
உன்னுடன் உறவு கொண்டு பிரிய முடியாமல் தத்தளிக்கிறேன்...
என்னை மண்ணிலிருந்து உனக்கு தத்துக்கொடுக்கிறேன்...
காந்தத்துகள்களாகி உன்னுடனே காலம்கழிக்கிறேன்...
-ஜாக்✍️