துணி

தொட்டவுடன் கைகழுவித் துப்பரவு செய்திடத்
=தொடர்ந்துன்னைத் தேடிவந்து தொந்தரவு செய்வதை
விட்டுவிடும் நோய்க்கிருமி வேதனையைத் தந்துனை
=வீட்டுக்குள் சிறைசெய்யா விடுதலைக்குள் தள்ளிடும்
கட்டவிழுத்து விடப்பட்டக் காளையெனத் திரிவதைக்
=கட்டாயம் விட்டுவிட்டுக் கவனமொடு நடந்திடு
நட்டமென்று ஒன்றுமில்லை நாட்டுக்குள் பரவிடும்
=நச்சுக்கள் தனையெதிர்த்து நாளும்நீ துணிந்திடு.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Apr-20, 12:39 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 56

மேலே