நடாசா எங்கடி போயிட்ட

நடாசா, எங்கடி போயிட்ட?
@@@@@@@@@@
யாரு அக்கா நடாசா? அமெரிக்காவிலிருந்து லந்திருக்கிற உங் கொள்ளுப் பேரனா? நடேசன்னு பேரு வைக்கிறதுதான் அந்தக் காலத்து வழக்கம். அப்பறம் நடராசன்னும் பேரு வைப்பாங்க. இதென்ன புதுசா 'நடாசா'. நடசேனை 'நடசா'ன்னு கூப்படறியா? பையனைப் போயி "எங்கடி போயிட்ட"ன்னு 'டி'போட்டுச் சொல்லற?
@@@@@@
அடியே கூருகெட்ட குப்பாயி. என்னோட அமெரிக்கா கொள்ளுப்பேரம் பேரு 'நட்டுராசு'டி.(Natraj = Natarajan).. எங் கொள்ளுப் பேத்தி பேருதான்டி 'நடாசா'.
@@@@@@
நடேசனைத்தான் நடாசான்னு இந்திப் பேரா மாத்தி வச்சுட்டுடாங்களா.
@@@@@@@
இல்லடி குப்பு. 'நடாசா' இந்திப் பேரு இல்ல..வெளிநாட்டு பேராம்.
@@@@@
அந்தப் பேருக்கு என்ன அர்த்தமாம்?
@@@@@
அடியே குப்பாயி உம் பேரத்தவிர நம்ம கிராமத்தில எல்லாரோட பேரும் இந்திப் பேருதான்டி. எல்லாம் அர்த்தம் தெரிஞ்சா இந்திப் பேருங்கள வச்சிருக்கிறாங்க.
@@@@@@
எம் பேரு சின்னத்தாயி. அதை எம் மவன் நரேச்சு 'சின்தா'ன்னு மாத்திவச்சுட்டான்..ரேசன் அட்டையலியும் சின்தா. வயசு தொண்ணூறுன்னு போட்டுருக்கறாங்க. நீ கூட உம் பேரை 'குப்புசி'ன்னு மாத்திக்கடி.
@@@@@@@
உம் பேங்கிட்டச் சொல்லி மாத்தச் சொல்லுக்கா.
@@@@@@@
சரி.சரி. அதோ வர்றாளே அவதான் எங் கொள்ளுப் பேத்திச் செல்லம் 'நடாசா'.
@@@@@@
நடாசா அழகா இருக்கறா அக்கா.
@@@@@@
■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆■■■■■■■◆■■◆●●●●
Natasa = resurrection. Greek name

எழுதியவர் : மலர் (24-Apr-20, 7:19 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 75

மேலே