கனவில் கவிஞன்

காதலைப்பற்றி நிலவைப்பற்றி
நிலவு கன்னி என்னவள் அவளைப்பற்றி
என்று இவற்றைப்பற்றி ஒரு கவிதை எழுதிட
காகிதம் எழுதுகோல் எடுத்து கையில் வைத்திருந்தேன்
மூளையில் கற்பனை அலைகள் எதுவும்
சரியாக வந்து மோதவில்லை
அதற்குள் நேரம் காத்திருக்கவில்லை
இரவு வந்தது .... தூக்கம் கண்களைத் தவழ
கனவு வந்தது அதில்...... நான் எழுத நினைத்த அத்தனையும்
வடிவம் பெற்றன அழகு கவிதை வரிகளாய்
அத்தனையும் முத்து முத்தான அழகு
கவிதை வரிகள் ........ எழுதிக்கொண்டே இருக்கின்றேன் கனவில்!

காலைக் கதிரோன் கிரணங்கள் என்மேல் விழ
கண் விழித்தேன் ...... எங்கே என் கவிதை வரிகள்
எங்கே அந்த காகிதங்கள், எழுதுகோல்
ஐயோ ..... நான் எழுதிய எதுவும் ஞாபகத்தில் இல்லையே
எங்கு போய் ஒளிந்துகொண்டன
நினைவு தேட .....
இன்னும் கிடைக்கவில்லை


இதோ நான்...... இன்றிரவு தூங்கும் முன்
தலையணை அடியில் ஒரு நோட்டு புத்தகம் எழுதுகோல்
வைத்திருந்தேன்....... கனவை நெனவுபடுத்த
இரவும் வந்தது ..... கனவேதும் வரவில்லை
நல்ல தூக்கம் வந்து எழுந்தேன்
கவிதை வரிகள் .... அந்த நான் கனவில் எழுதிய
காதல் காவிய வரிகள் ..... இயற்கை கவிதை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
மற்றோர் கனவில் எப்படியும் சிக்கிவிடும் என்று
நான்.......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (24-Apr-20, 8:02 pm)
Tanglish : kanavil kavingan
பார்வை : 212

மேலே