பையன் இப்பிடி பண்ணீட்டானே
ஆத்தா எம் பையன் நம்ம தலைல கல்லப்போட்டுட்டான். இப்பிடி செய்வான்னு நாங் கனவிலகூட நெனைக்கில. நான் என்ன ஆத்தா செய்வேன்.
@@@@#@@
என்னடா ஆச்சு பொன்னுச்சாமி? ஏன்டப்பா பதட்டமா இருக்கற?
@@@@@@@
அவன் அமெரிக்காவில அவனோட வேலை பாக்கற ஒரு வெள்ளக்தாரப் பொண்ணக் கல்யாணம் பண்ணீட்டானாம்.
@@@@@@
படுபாவி. இப்படியா செய்யறது? நான் அவனுக்கு 'கல்யாணராமன்'னு பேரு வைக்காதடான்னு சொன்னேன். நீ எம் பேச்சைக் கேக்கல. இப்பப் பாரு. நமக்கு துரோகம் பண்ணீட்டு யாரோ ஒரு வெள்ளக்காரிச்சையைக் பொண்ணக் கல்யாணம் பண்ணீட்டான்.
@@@@@@
உம் பேச்சைக் கேக்காம நாஞ் செஞ்ச தவறுக்கு இது தண்டனை. அந்தச் சோசியகாரன் பேச்சைக் கேட்டு மோசம் போயிட்டேன். மோசம் போயிட்டேன்.
@@@@@@
சரி. சரி. அந்த நாயை நெனச்சு அழுகாதடா பொன்னுச்சாமி.