பசியாலும், நோயாலும்

முன்பு
மன்னர்கள் காலத்தில்—சில
மனிதர்கள் இதனை
மாட்டிக் கொண்டு
மக்களிடமிருந்து
பொன்னையும், பொருளையும்
கொள்ளையடித்தார்கள்

இதனை மாட்டியவன்
அரசரிடம் மாட்டிக் கொண்டால்
அன்று தண்டிக்கப்பட்டான்,
மக்களால்வெறுக்கப்பட்டு
மரியாதை இழந்தான்,
சிறையில் அடைக்கப்பட்டு
சித்ரவதை பட்டான்

இன்று உலகமுழுதும்
இதனை மாட்டிக் கொண்டு
சொந்த முகம் மறந்து
சுவாசிக்கவும் முடியாம
சிறகு ஒடிந்த பறவைபோல
சாவுக்கு பயந்து
சுற்றம் சூழ வாழாம
தனித்து நிற்கிறார்கள்

எய்தவள் ஊர் சுற்ற
எல்லாம் நம் தலைவிதியானது,
எங்கு போனாலும்
எத்தனை சோதனைகள்
முடிவில் மருத்துவ சோதனை
முடிந்ததும்—பதினைந்து
தினங்கள் காத்திருப்பு
பின் இலை மறை காய் போல

அன்று கொள்ளையன்
இழைத்த பாவத்திற்கு
அதன் துயரை அவனே சுமந்தான்,
இன்று கொரோனா
இழைத்த பாவத்தால்
அல்லல்படுபவர் மக்களல்லவா !
பறிபோகிறது மக்களின் உயிர்
பசியாலும், நோயாலும்.

எழுதியவர் : கோ. கணபதி. (3-May-20, 6:51 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 45

மேலே