சிட்டுக்குருவிகளும் அலை பேசியும்
எனக்கு பறவைகள்
என்றால் பிடிக்கும்
குறிப்பாக குருவிகளை
மிகவும் பிடிக்கும்
எனது அலை பேசியின்
அழைப்பொலியாக
குருவிகளின்
சப்தங்களையே
வைத்துள்ளேன் ,,
ஒவ்வொரு அலை பேசி
அழைப்பையும் பேசிய
பின்னர் .. தொடு திரை
அலை பேசியை ஆள்காட்டி
விரலால் அழுந்த தேய்த்து
தொடர்பை துண்டிக்கும்
போது ஆள்காட்டி
விரலின் முனையில்
பிசு பிசுப்பாக
மரிக்கின்ற குருவிகளின்
ரத்தம் ,,