ராப்பிச்சை

ராப்பிச்சை
அந்தக் காலத்துலே ராப்பிச்சைன்னு ராத்திரி நேரத்துலே பிச்சைக்காரர்கள் வீட்டுக்கு வீடு வாசல்லே நின்னுகிட்டு பிச்சை கேட்டு வரதுண்டு. ( இப்ப டவுன்லேயோ அல்லது சிடியிலேயோ, அடுக்குமாடி குடியிருப்புகளிலேயோ இருக்கறவங்களுக்கு இந்த இனத்தைப் பத்தி எதுவும் தெரியாது) இப்ப அந்த இனமே அழிஞ்சி போச்சுன்னு நினைக்கிறீங்களா?
கவலைப்படாதீங்க. இப்ப நாமதான் அவங்களுக்குப் போட்டியா வந்துட்டோம்.

என்ன சொல்றீங்க?

முந்தி வீட்டிலே தினசரி சமையல் நடக்கும். ராத்திரி மிஞ்சிப் போனதை வெச்சி மறுநாள் சாப்பிடற பழக்கம் கிடையாது. அதை ராப்பிச்சைக்காரனுக்குப் போட்டுடுவாங்க.

ஆனால் இன்னிக்கு என்ன நடக்குது?

மிஞ்சிப் போன சமையலை பத்திரமா ஃப்ரிட்ஜ்லே எடுத்து வச்சி, அன்னிக்கு அந்த ராப்பிச்சைக்காரன் சாப்பிட்டதைத்தானே மறுநாள் சாப்பிடறோம். ஒரே ஒரு வித்தியாசம். அந்தப் பழைய பதார்த்தங்களை சூடு பண்ணி சாப்பிடறோம்.

ராப்பிச்சைக்காரன்கூட, முதல்நாள் மிச்சத்தைத்தான் மறுநாள் சாப்பிடுவான்.
ஆனா இன்றைய மாடர்ன் ராப்பிச்சைகள், மூணு நாள், நாலு நாள் வெச்சிருந்து, மறுபடியும், மறுபடியும் அதையே சூடுபண்ணி சாப்பிடறாங்களே. இவங்களை என்னன்னு சொல்றது?. ராராரா…. பிச்சைன்னு சொல்லாமா?

எனவே அந்த இனம் அழிஞ்சி போயிட்டுதுன்னு கவலைப்படாதீங்க. அவங்கெல்லாம் இப்ப . ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் பிச்சைகளாக ஆகி ரொம்பவே அதிகம் ஆயிட்டாங்க. இப்ப நாம எல்லாமே அந்த ராப்பிச்சைகளா ஆயிட்டோம். என்ன சரிதானே?

எழுதியவர் : ரா.குருசுவாமி (7-May-20, 1:00 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 37

சிறந்த நகைச்சுவைகள்

மேலே