நகைச்சுவை துணுக்குகள்

108 தேங்காய் உடைக்கிறதா வேண்டிக்கிட்டு நான் தேங்காய்களை உடைச்சிக்கிட்டு இருக்கும்போது ஒரு தேங்காய்ச்சில்லு அப்போ பக்கத்திலே போய்க் கொண்டு இருந்தவரோடே கண்ணுலே குத்திட்டுது. அவரை சமாதானப் படுத்த பக்கத்துலேஇருக்கிற டாக்டர்கிட்டே அழைச்சிக் கிட்டு போக வேண்டியதாய்ப் போயிடுச்சு. டாக்டர் அவரோடே கண்ணை டெஸ்ட் பண்ணிட்டு ரொம்ப ஜாக்கிரதையா இதை கவனிக்கல்லைனா கண்ணே போயிடும்னு சொல்லி கண்ணுக்குக் கட்டுப் போட்டுட்டார்.

அப்புறம் நீங்க என்ன பண்ணினீங்க?

பிள்ளையாரப்பா, இவருக்கு கண் ஒண்ணும் ஆகாம காப்பாத்து. உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிக் கிட்டேன்.
********************
ஏன் நம்ம கலக்டர் இவ்வளவு கோவமா இருக்கார்?

நம்ம ஹோட்டல் திறப்பு விழாவிற்கு 'மாவட்ட கலக்டர் வருகை' அப்படீன்னு போடறதுக்குப் பதிலா 'மாவாட்ட கலக்டர் வருகை'ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டிட்டாங்க. அதான் அவர் கோபத்திற்குக் காரணம்.
********

எழுதியவர் : ரா. குருசுவாமி (7-May-20, 1:06 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 66

சிறந்த நகைச்சுவைகள்

மேலே