வசீகரமே

வசீகரமே

தோழமை தேரோட்டத்தை
வடம் பிடித்து
முதல் இழுத்த
அன்புத்தோழமை
தவசியின்
சொல்லுங்கம்மா
அத்தனை வசீகரம்

புன்னகையாய்அறிமுகம்
பண்பாய் பரிட்சயம்
சடுதியில்கானாவில்
களமிறங்கி
கலகலக்க வைத்திட்ட
சிவத்தின் சீரான
நெறிமுறைகள்
வசீகரமே

பள்ளியிலும் நாட்டாமை
நட்பிலும் ஆளுமை
ம் என்றவுடன்
இன்முகத்துடன்
புகைப்படம்
பதியும்
selfie செல்லத்தின்
புன்னகையும் வசீகரமே

படிக்கும் காலத்தில்
மாவட்ட மதிப்பெண்
அடுமனையில்
மாவாட்டினாலும்
அடுக்கடுக்காய்
கவிதையுடன்
களமாடும்
மருத்துவரே
உங்கள்
படைப்புகள்
அத்தனையும்
வசீகரமே

தமிழ் ஆசான்
மைந்தன் இவன்
மறக்கவில்லை
யாரும் மன்றத்தில்
அவன்தன் குரலில்
நான் கண்டேன்
ஆசிரியரின்
அதே வசீகரம்

வில்லுக்கு விஜயனே
சொல்லுக்கு மட்டும்
கருத்து வறட்சி
எனும் கதை
உன் மௌனமும்
மன்றத்தில்
வசீகரமே

வேதாளம் என
எனை அழைத்து
வாங்கி கட்டிக்கொண்டு
வருடங்கள் ஆனாலும்
பயப்படுவது போல்
பாந்தமாய் பார்க்கும்
நண்பனும் வசீகரமே

உலகம் சுற்றும்
பிரச்சினைகளும் சுழலும்
இருப்பினும்
பிரகாசமாய்
புன்னகைக்கும்
பூமியும்
வசீகரமே

மருந்தாளுனர்
இருந்தாலென்ன
மகத்துவம் குரலில்
கான மழையில்
கவர்ந்திடும்
ரம்மியம்மான
ரமேஷின் குரல்
வசீகரமே








காவலும் குடும்பமும்
கடமையே ஆகினும்
காதலிப்பேன் கவிதையை
என களமிறங்கும்
நட்பும் வசீகரமே

காவலரென்பதை தாண்டி
வெற்றிக்கோப்பைகளை
விளையாட்டாய்
வென்றிடும்
வீரனாய்
செல்ல முத்து
வசீகரமே

சுவாரசியமான
உரையாடலின்
இடையே
சுகந்தமான
பாடல்களுடன்
அதிரடியாய்
களமிறங்கும்
நயனின் பக்தனும்
வசீகரமே

இளங்காலை
வணக்கத்துடன்
கருத்தான பதிவுமாய்
இனிமையாய்
இளந்திரையன்
வசீகரமே

மௌனமாய்
வீற்றிருந்து
மன்றத்தில்
சமூகப்பதிவாய்
சட்டென
திரும்பவைக்கும்
அசோகமும்
வசீகரமே

வேலுவை வாரிவிட
மொத்தமாய்
களமிறங்கும்
மாரிமுத்து
வரதுவின்
வருகையும்
வசீகரமே

வந்தவுடன் களமிறங்கி
வார்த்தைகளில் வம்பிழுத்து
போர்க்களமாய் இடமாற்றி
புயலென வேல் வீசி
புன்னகையில் தப்பித்து
குடும்ப நண்பனாய்
கண்டவுடன்
கட்டுப்பாட்டை
குத்தகைகெடுத்த
வேலனின்
வார்த்தை விளையாட்டுகள்
வசீகரத்தின் சிகரமே

மற்றபடி
மன்றத்தில்வாராமல்
மனதுக்குள்சிரிக்கும்
அத்தனைதோழமையும்
அளவிலாவசீகரமே

விதியோர பயணத்தில்
நதியோரபூக்களாய்
முகம் காட்டி
புன்னகைக்கும்
நட்புக்களே
நீங்கள்
என்றென்றும்
வசீகரமே

எழுதியவர் : (7-May-20, 7:54 pm)
சேர்த்தது : krishna viji
பார்வை : 53

மேலே