அம்மாவின் அவசர சமையல்

அம்மாவின் அவசர சமையல்.

ஞாயிற்றுக்கிழமை
மாலை வேளை திடீர் மழையில்
அவசரமாக அம்மா சுடும் மொறு, மொறுவான சூடான வெங்காய பஜ்ஜி விவரிக்க இயலாத அலாதி சுவை.

குடும்பமே வெகு தூர பிராயணம் போய்விட்டு வந்த கலைப்பில் பிரிட்ஜில் இருக்கும் பழைய மாவில் அம்மா அவரமாக செய்த ஊத்தப்பம் கோர பசிக்கு தேவாமிர்தம்.

தேர்வில் மதிபெண் குறைந்ததுக்கு அப்பா திட்டியதால் காலை டிபன் சாப்பிடாமல் கொல பசியில் இருந்த எனக்கு அம்மா மத்திய சாப்பாடுக்காக கட்டி கொடுத்த தயிர் சதாமும் மாவடுவும் கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஆத்ம திருப்தி.

வெய்யில் காலத்தில் மொட்டை மாடியில்
நிலா வெளிச்சத்தில்
சுடச்சுட வெங்காய சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்க அரிசி வத்தல் சும்மா ஆள தூக்கும் அற்புத சுவை.

மாதம் ஒரு முறை அம்மா செய்யும் வெண் பொங்கலில் மிளகு, முந்திரி பருப்பு சிறப்பு என்றாலும் அதற்கு அவள் வெண் பொங்கல் மேல் விடும் சின்ன வெங்காய கெட்டி சாம்பார் இருக்கே சும்மா கலந்து அடிச்சா ...
சொல்ல முடியாது சுவையொ சுவை

உடம்பு சரியில்லாமல் போனால் அம்மா செய்யும் நோய் கஞ்சி விசேஷம் தான் ஆனால் அதற்கு அவள் கடிச்சிக்க தரும் மோர் மிளகாய்.
ஜூரம் ஓடி விடும். அடேகங்கப்பா காரத்தினால் கண்ணில் கண்ணீர் வரும்.
மனம் அமைதி அடையும் சுவையினால்.

- பாலு.

எழுதியவர் : பாலு (7-May-20, 11:23 pm)
சேர்த்தது : balu
பார்வை : 84

மேலே