ஓடி விளையாடு பாப்பா

படிக்கப் போகும் பாப்பா
கவனமாக இருக்கவும்
பள்ளிப் பாடத்தில் மட்டுமல்ல
உன் வாழ்க்கைப் பாடத்திலும்

காமப் பார்வைக் கொண்ட
கழுகுகள் சுற்றித்திரிகிறது
உன் ரூப சௌந்தர்யத்தை கொத்தி தின்ன

தொட்டுப் பேசும்
ஆண்களை நம்பாதே
தொட்டு தொட்டு
உனை புட்டுப் பார்க்க நினைப்பான்
விட்டுக் கொடுக்காதே

அப்பன் என்றாலும்
ஆசான் என்றாலும்
அவனின் பார்வையின்
அர்த்தத்தை புரிந்துக்கொள்ள பழகு

வெட்கம் உன் உடல்மொழி
வெட்கத்துக்குள்
ஒரு வெப்பத்தை பதுக்கி வை

விடலை உடல் ஒரு மாயை
மதி மயங்காதே
மறுதலிக்கத் தயங்காதே
பெண் பூ மட்டுமல்ல
பூகம்பம் என்பதையும் காட்டு.
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (8-May-20, 7:28 am)
பார்வை : 33

மேலே