பேசாத என்னை

பேசாத என்னை

பேச வைத்தது  இந்த

பேனா முனை...✍


என் குரல் 

உங்கள் செவிகளை கிழிக்கவில்லை

என் எண்ணங்கள் உங்கள்
 
இதயங்களில்  எழுதபடட்டும்...

எண்ணத்தில்

ஆயிரம் வார்த்தைகள்

உதயம்

என்னில் மட்டுமே 

அத்தனையும்

புதையும்...


பேனாவின் கழுத்தில் 

என் குரல் கட்டுண்டு

இருக்கிறது

அதன் முள்ளில் தான்

என் வார்த்தைகள்

காயப்படாமலே

வாழ்ந்து  கொண்டு...


பூக்கள் பேசுகின்றன

தன் வாசம் கொண்டு...


வீணை அழுதாலும்
 
அது...     இசையாக...


இயற்கை சிரிக்கிறது

தன் அழகாக...


நானோ ?


மீண்டும்

மானுடப் பிறப்பிருந்தால்

இறைவா  நீ எனக்கு

பதிலாக

அன்று தெரியும் - நான் ?

ஓ...

நீயும்  பேசாமல்

கற்சிலையாய்...

எழுதியவர் : பசுபதி தங்கசாமி (8-May-20, 8:26 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 91

மேலே