வலியது வாழும்
சில மனிதர்களின்
வேஷம் கலைந்த பின்னரே
பாசம் உணர்ந்தேன்
கத்தியை விட கூர்மையானது
வாய்ப் பேச்சுகள்
கண்ணீராய் கசிகிறது
இரத்தத் துளிகள்......
அவமானங்கள் தந்த அனுபவங்கள்
ஏமாற்றங்கள் தந்த ஞாபகங்கள்
முள்ளாேடு இருக்கும்
ராேஜாவின் அழகாய்
இரசிக்கப் பழகி விட்டேன்......
வலித்து வலித்து ரணமான
காயங்கள் மரத்துப் பாேய்
மனம் அமைதி தேடிய நாெடிகளில்
தனிமையை பரிசாகக் காெடுத்து
பகட்டான வாழ்க்கை பழகிப் பாேய் விட்டது.
இனிமேலும் ஏதும் உண்டாே
ஈட்டிகளாய் தாக்குவதற்கு
முக மூடிகள் கழன்ற பின்னும்
சுய உருவத்தை மறைக்கிறது
பாேலிச் சிரிப்புகள் .......
வலியதிலும் வாழ்வு
விதி எழுதிய தீர்ப்பு
வரண்டு பாேன நாவுக்கு
உப்பு நீர் தித்தி்ப்பு
மனிதம் வாழட்டும்
மனிதராய் வாழ்வாேம்
வலியதும் வாழும்
வலியும் ஓர் நாள் சாகும்...