தலைநிமிர வைப்போம்

தலைநிமிர வைப்போம்
****************************

ஒளியாய் உதவி செய்ய துணிந்தாலே
ஒளிர்வாய் உலகமும் உருண்டு செல்லுமே

கரம் கொடுத்து நாம் செய்வது
காக்கப்பட்டு மகிழ்வாய் எழுந்து நிற்கும்
காரியத்தோடு செய்யாது தெளிந்த மனதுடன்
கிள்ளியே கொடுப்போம் அள்ளியே அணைப்போம்
பார்வையாளராக பதுங்கி தூங்கி போகாது
பண்பாக ஒளியாய் உதவி இருப்போம்
இதுவே தருமம் அதுவே வாழ்வு
இயன்றதை செய்தே மகிழ்வாய் வாழ்வோம்
இத்தகையை நெறியை உயர்வாய் கொண்டு
காயம் கொண்டோரையும் தலைநிமிர வைப்போம்
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (8-May-20, 2:04 pm)
பார்வை : 81

மேலே