46 கொடுங்கோல் அரசன் தன் உயிரும் விடுவான் – அரசியல்பு 10

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் காய்ச்சீர் அருகி வரலாம்)

கொடியமன் னவர்க்குக் குடிகளே யொன்னார்
..கோட்டையே யமர்க்களம் அவர்தம்
அடிகள்தோய் நிலமெங் கணும்படு குழியாம்
..அயின்றிடும் அன்னமும் விடமாம்
நெடியவா சனமே காசன மேடை
..நிமிருழை யோர்நமன் றூதர்
கடிமனை மயானக் காடெனில் கொடுங்கோற்
..காரண ருய்யுமா(று) உளதோ. 10

– அரசியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

முறை தவறிய மன்னர்களுக்குக் குடிகளே பகைவர் ஆவர்; கோட்டையே போர்க்களம்; அவர்கள் பாதங் கள் படும் இடங்களெல்லாம் படுகுழியே; உண்ணும் உணவும் நஞ்சாகும்; அமர்ந்திடும் பெரிய இருக் கையே கொலை மேடையாகும்;

அவரது பணியாளர்களே கூற்றுவன் தூதுவர் ஆவர்; அரண்மனை எரிக்கும் சுடுகாடு ஆகும். இவ்வா றிருக்கும் கொடுங்கோல் மன்னர்கள் வாழ்வதற்கு காரணம் ஏதும் உள்ளதா” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

காசனம் - கொலை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-20, 6:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே