தொப்புள் கையிரு

வெள்ளை நரை வெளிப்படுது
முகந்தோல் மூப்பு தொடுது..

ஓய்வில்லாம உடல் வாடுது..
தல்லாடும்போதும் தாலாட்டு பாடுது

தாயாய் இருப்பதால் நாயாய் ஓடுது..
புள்ளைக்கு வாய்ருசிக்க உழைச்சு போடுது...

ஆத்துல எழுதினாலும் அழியாதம்மா உன் பெயரு..
ஆத்தா உன்ன நினைச்சி காயுதம்மா என் வயிரு...

அம்மாங்குற சொல்ல பேச மறந்தா
மாயுமம்மா என் உயிரு..
உனக்கும் எனக்கும் இடையே
அறாது தொப்புள் கையிரு...

-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (9-May-20, 8:32 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 118

மேலே