வாழ இயலாது

நல்லவனாக ஒருவன்
நானிலத்தில் பிறப்பெடுப்பது
இயற்கை தந்த வரம்,
அவனை நல்லவனாகவே
இறக்க வைப்பது இயற்கைக்கு
இயலாத காரியம்

நேர் வழியில் சேர்க்காத செல்வம்
நன்மை பயக்காது
நெஞ்சுக்கு நிம்மதியும் தராது
கால் வயிற்றுக் கஞ்சிக்கு—ரேஷன்
கடையில் கால் கடுக்க நின்று
வாங்கும் அரிசிக்கு நிகராகுமா ?

குறுக்கு வழி செல்வங்கள்
குடும்பத்தை பாழாக்கும்
ஒற்றுமையை கெடுத்து
உறவுகளை பிரிக்கும்
ஒத்தால் வாழலாம்,
எத்துதலால் வாழ இயலாது

எழுதியவர் : கோ. கணபதி. (11-May-20, 12:39 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : vaazha iyalaathu
பார்வை : 46

மேலே