எழுத்தே சொல்

எழுத்தே சொல்

கொடுமைக் கொரானா சிறையை கொடுக்க
கொடுமை மறந்திட நாடினேன் பலதையும்
அடுத்தேன் எழுத்தையும் படுத்துது எழுத்தும்
லாகின் பலசெய்தும் எழவில்லை ஏனோ
லகானை தளர்த்தியும் ஓடா நின்றது
எழுத்தே எழுத்தே எழுந்திடு எழுத்தே
சொத்தை வார்த்தை நீக்க ஒன்றை
மொத்தம் கவிதை மறைவதேன் எழுந்துசொல்
கடுமைக் கொரானா பிடித்ததோ எழுத்தையும்
விடுப்பது மனுவை யாரிடம்
தடுமாறும் தமிழுக்கு நல்வழிக் காட்டுவீரே

எழுதியவர் : பழனிராஜன்l (17-May-20, 3:44 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 367

மேலே