தவறாத் தமிழன்

தமிழன் தவறான்


தினமும் தொழுதலால் வெய்யோன் தினகராம்
சூரியர்கு பொங்கல் விசேட பொங்கல்
தினமும் வணங்கும் விநாயகர்கு விழாவாம்
விநாயக சதுர்த்தி விநாயகர்கு தனிவிழாவாம்
கந்தனைக் காலைத் தொழுதாலும் காவடி
ஆடிமாதம் பாடி எடுப்பதை துண்டித்தார்
அங்காளம் மாவுக்கு ஆடியில் கூழாம்
குளுகுளு கூழாம் கொப்பரையில் வார்ப்பர்
அவனாம் சிவனைத் தொழசிவ ராத்திரி
வங்காள மாலவனை கேசவனை மாதவனை
பங்கனை மார்கழி மாதம் முழுக்க
ஓசோனும் ஊர்வது. மண்ணில் கண்டு
பஜனைசெய்தார் மார்கழிப் பனியில்
அறுவகை பக்தி தவறார் தமிழரே

எழுதியவர் : பழனிராஜன்l (19-May-20, 6:00 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 117

மேலே