சிறைப்பிடிக்க சித்திரை மாதம் வந்த காதலனே
இத்தனை நாள் பார்க்காமல்
இன்று ஏன் வந்திரோ :
என் கண்ணீர் திவலைகள்
உன்னோடு கலந்திடவோ !
துயில் கொள்ள கண் முடிய நேரம்
என் துயில் கலைத்திடுவோ !
கார்காலம் வருவேன் என்று
நீ சொன்ன வார்த்தை
இன்று காற்றோடு போச்சி !
இன்று மெத்தனமாய் நீ வந்ததால்
உன்னை பார்த்து ஊரார் சிரிக்கும்படியாச்சு !
நித்திரையில் உன் கனவு
நீங்காத இடம் பிடிக்கும் !
நிஜத்தில் உன் நினைவு
ரீங்காரம் போல் பண் இசைக்கும் !
எப்போது நீ வருவாய் என்னவனே !
காற்று அடித்தால் முறிந்திடும்
சிறுசெடி நானே !
உன்னை காதலித்த பாவத்திற்கு
உயிரை கையில் பிடித்த படி
கட்டுண்டு நின்றேனே !
நெடுக்காலம் ஆனதால்
நான் நினைவிழந்து போனேனோ !
ஆனாலும் :
உன் நினைவு அழிக்க முடியலையே !
யாருமில்லை என எண்ணாதே !
உன் கரம் பிடிக்க காத்திருக்கும்
உன் சிவப்பு சித்திரமே !
தினம் உன்னை தேடிப்பார்த்து
என் கண்கள் செவ்வானம் போல்
சிவந்து தான் போச்சு :
என் செவ்விதழை சிறைப்பிடிக்க
சித்திரை மாதம் வந்தாயோ !
என் மழை எனும் காதலனே !.......