வெற்று முழக்கங்கள்

#வெற்று #முழக்கங்கள்
*****************************
ஓர் குடையில் ஒற்றுமையாக வாழத்தான்
ஒருமைப்பட்டு ஒன்று சேந்து வாக்கு அளிப்பீர்
தோல்வி என்னை தொட்டு தழுவினாலும்
வென்றுவிடுவேன் விடுதலையை தேர்தல் காலங்களில்
விடாத அடை மழையாக விடமால் பேசுகிறான்
வெற்று அரசியலை அரசியல் சாணக்கியன்
கன மழையா கனவு மழையோ
கண்டறிய முடியாமலே கண்களையும் கட்டி
வாக்குறுதிகளை அள்ளி வீசியே குளிரவைத்து
வார்த்தைகளுக்கு அமர்க்களப்படுத்தி வாடிக்கையாக நகருகிறான்
விழுந்த குளுமை வெப்பம்மாகி போனாலும்
வழுக்கல் கொண்டு வெட்கம் இன்றி
வான் மேகம் போல வியக்கிறான் குடிமகன்
எதிர் திசையில் என்ன வந்தாலும்
ஏற்று கொள்வோம் தாங்கி கொள்வோம் என்றே
கோமாளிகளாய் யாசகம் இட்ட பாமரர்கள் வாழ்கிறார்கள்
அகிலன் ராஜா Canada

எழுதியவர் : Akilan raja (26-May-20, 4:22 am)
பார்வை : 193

மேலே