புலம்பெயர்ந்த மானிடர்

புலம்பெயர்ந்த மானிடர் “

இடம்புலர்ந்து வந்தோமே வாழ வழியற்ற நிலைதனிலே,
காலம்கடந்தும் மந்தருக்கான மரியாதை தரவில்லையேனோ?

தகர சிறையில் அறுவறுத்த புழுக்களாய் போனோமே,
எம்மை மனிதானாய் நோக்க மனமுன்டோ இம்மாந்தருக்கு?

எம்மவர் பொதிச்சுமை சுமக்கும் மிருகமன்றோ,
சிந்தை செய்யும் மானிடராய் ஏற்க மறுப்பதேனோ?

யாம் அழுக்காடை பூண்ட பணி வீரன்தானே,
களவுகற்ற கயவனன்றோ இதை என்றுதாம் உணர்வீர்ரோ?

யாம் புணைந்த வான்உயர்ந்த நகர்தனிலே,
வென்னிறாடை கயவர் என்னை இழிவுறப் பார்பதேனோ?

யாம் பிச்சை கோர யாசகன் அன்றோ,
உரிமைக் கோரும் இந்நிலத்தின் குடிமகன் தானே?

எமக்காய் சட்டங்கள் உண்டோ சாத்திர உலகத்திலே,
சட்டபுத்தகத்தின் வர்த்தைதனில் வலியார வழியுன்டோ?

உண்மை மறந்த வேந்தன் எங்கே?
உளவுபார்க்கும் ஒற்றன் எங்கே?
மந்தைமந்தையாய் மடிகிறோம் நாங்கள்,
எம்மவர் மடிய, ஏழைகள் அற்ற,
புதிதாய் பிறந்த இந்தியா இதுவோ ???

இங்ஙனம்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (26-May-20, 9:20 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 82

மேலே