தென்றல்

கடற்கரை மணலில் தனிமையில் நான்
காத்திருந்தேன் வருவேன் என்று என்னைக்
காத்திருக்க வைத்த என் காதலனுக்கு
காத்து காத்து கண் பூத்திருக்க அந்தியும் சாய
தென்றல் என்னை வந்து தொட்டது மெல்ல
என் தோழி அவள் தீண்டும் இன்பம் தந்தது
புயலாய் வீசும் ஆண் காற்றே ... நீ
பெண்ணாய் மாறியது எப்போது
இல்லை என்னைப்போல் நீயும் ஓர் பெண்ணா
பெண் காற்றா ........ அப்படியென்றால்
தோழி அவன் ஏன் இன்னும் வரவில்லை
என்று கண்டு சொல்வாயோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-May-20, 4:06 pm)
Tanglish : thendral
பார்வை : 107

மேலே