உன் காதலியின் கல்யாணம்

ஒரு தலை காதலியின் கல்யாண புகைப்படத்தை கண்டு மனதின் வலியின் வெளிப்பாடே இவ்வரிகள்

தேவதைகள் சூழ
வெள்ளி வீதியில்
மஞ்சள் பட்டில் நிறை திங்களாய்
பல்லக்கில் வந்த இளவரசியே !

பூரணமாய் நீ அமர்ந்திருக்க
மணவாளனின் நேசத்தால்
இமைகள் நெகிழ
இதழில் குறுநகையும் கொஞ்சி விளையாட

சித்திரை காலையில்
மங்கள அரிசியும்
மகரந்த மலரும்
மாரியாய் பொழிந்து மேடையை நனைக்க

மஞ்சள் கிழங்கு மார்பில் ஊஞ்சலாட
தேவனிசையில் அக்னியை சுற்றி
இருவரும் ஒரு உயிராகிய தருணத்தை
புகைப்படமாக கண்டும்
நெஞ்சம் உன்னை மறக்க மறுக்கிறது என் தளிரே.....

எழுதியவர் : கண்மணி (2-Jun-20, 11:32 pm)
பார்வை : 1225

மேலே