மனைவி காெடுத்த தண்டனை நேரம்

உறவினர் வீட்டு திருமணத்தை முன்னிட்டு , நானும் - என் மனைவியும் , கடந்த ஞாயிற்றுக்கிழமை துணியெடுக்க திருவான்மியூர்க்கு போனோம்.

அந்த கடையில - அரசு சொன்ன அனைத்து விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது...

கடைக்குள்ள நுழையும்போதே - இப்ப புதுசா வந்துருக்க டிஜிட்டல் தெர்மோமீட்டர் வச்சு செக் பன்னிட்டு, அப்புறம்தான் கடைக்குள்ள அனுப்புறாங்க. மாஸ்க் கட்டாயம் அணியனும்.. சேனடைசர் போட்டு கைகளை தூய்மைப்படுத்தனும். குறிப்பிட்ட அளவுதான் ஆட்கள் கடையில இருக்கனும்... ஏசி ஆஃப் பன்னயிருக்கனும்... மின்விசிறி ஓடலாம்... இப்படி எல்லா விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது...

நானும் என் மனைவியும் கடைக்குள்ள நுழையும்போது -

முதல்ல - என்னை புதுசா வந்துருக்க டிஜிட்டல் தெர்மோமீட்டர் வச்சு செக் பன்னாங்க -

எனக்கு உடல் வெப்பநிலை சீராயிருந்தது...
கடைக்குள்ள போக அனுமதிச்சாங்க..

அடுத்து என் மனைவிய டிஜிட்டல் தெர்மோமீட்டர் வச்சு செக் பன்னாங்க -
உடல் வெப்பநிலை 100-க்கு மேல இருந்தது...

கடைக்குள்ள அனுமதிக்கல..
என் மனைவிய வெளியவே நிக்க வச்சுட்டாங்க...

சிறிதுநேரம் கழிச்சு செக் பன்னிட்டு, நார்மலா இருந்தா , கடைக்குள்ள அனுப்புறேன் அப்டின்னு சொல்லிட்டாங்க..

நான் கடைக்குள்ள ஃபேன் காத்துலியும், என் மனைவி கடைக்கு வெளிய வெயில்லியும்... காத்துக்கிட்டு இருந்தோம்...

சிறிது நேரமாச்சு..

திரும்பவும்...
வெப்பநிலைய செக் பன்னாங்க
அப்பவும் வெப்பநிலை குறையில...
திரும்பவும் என் மனைவிய வெயிட் பன்ன சொல்லிட்டாங்க...

கொஞ்ச நேரமாச்சு...

என் மனைவி -
என்னை ஒரு பார்வை பார்த்தா

அந்த பார்வையோடு அர்த்தம் -
எனக்கு நல்லாவே புரிஞ்சுது...

டேய் மவனே.. என்னை வெயில்ல நிக்கவிட்டுட்டு , நீ மட்டும் உள்ள ஃபேன் காத்துல ஜாலியா இருக்கியா..
இரு... இரு... உன்னை கவனிச்சிக்கிற...

அப்டிங்கிறதுதான்... அந்த பார்வையோட அர்த்தம்...

எனக்கு உள்ளுக்குள்ள செம சிரிப்பு..
இருந்தாலும் நான் அதை காட்டிக்கில... சாக்லெட் கிடைக்காத குழந்தை எப்படி முகத்தை வருத்தம்மா வச்சுக்கும்மோ... அதே மாதிரி முகத்தை வருத்தமா வச்சுகிட்ட..

கொஞ்ச நேரமாச்சு...
உடல்வெப்பநிலை நார்மலாகி
என் மனைவியையும் கடைக்குள்ள அனுமதிச்சாங்க..

அதுக்கப்புறம்..
இரண்டு பேரும் ட்ரஸ் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பினோம்...

வீட்டுக்கு வண்டியில திரும்பும்போது..
எனக்கு -
நடந்தத நினைச்சு...நினைச்சு..
ஒரே சிரிப்பு...

நான் சிரிச்சத - வண்டி கண்ணாடியில
என் மனைவி பார்த்துட்டா

அவ்வளதான்...
கொஞ்ச நேரத்துல

வீடு வந்தது...

என் மனைவி வீட்டுக்குள்ள போன

நான் வீட்டுக்கு வெளிய -
1 மணி நேரம் வெயில்ல...
நின்னு...
நின்னு....
காய்ந்து வத்தலான.....
என்ன பன்றது மதிய சாப்பாடு வேணுமே......😂😂😂

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (5-Jun-20, 5:23 am)
பார்வை : 111

மேலே