கேளடி தாேழி - ராெமான்ஸ்

வீணாய் - மருதாணி இலைகளை
வீசினேனடி என் தோழி - அதனை
வீசியக் காரணம் யாதெனில் -

என் உள்ளங்கை சிவக்கவே
என் தோட்டத்து மருதாணியை -

எனக்குரியவன் வருவதையும் அறியாது
நான் பறித்துக் கொண்டிருந்தேன்...

அவன் தோட்டத்தில் பூத்த
அழகி மலர்களையெல்லாம்
தொட்டு இரசித்தபடியே
என்னிடம் தேடிவந்து -
என்னையும் மலரெனயெண்ணி
என்னவன் தொட்டுவிட்டான் -
என்னவன் தொட்டக்காரணத்தால்
என் உள்ளங்கை மட்டுமல்ல
என் திருமேனியும் சிவந்துவிட்டது -

அதனால் பறித்த மருதாணி இலைகள்
அவசியமற்றதாகி -வீணாகி விட்டன -

தோழி அதுமட்டுமல்ல - இப்போதெல்லாம்
என் தலைவனை நினைக்கையிலேயே
என் உள்ளங்கையோடு
என் உள்ளமும் சிவந்து விடுகின்றது....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (5-Jun-20, 5:26 am)
பார்வை : 202

மேலே