கைப்பேசி கவி பாடுகிறது

காற்றுவெளியிலே...
ஒரு கானம் கேட்குதடி...
கண் மறைவினிலே...
காந்தம் விசைகொண்டு இழுக்குதடி...
காலநேரம் பார்ப்பதில்லை...
காதல் பொழிய மறந்ததில்லை...
கண் சிமிட்டும் வேளையிலே...
காதருகே இதழ் சிரிக்குதடி...
ஆசை கொண்ட உள்ளமதில்...
அச்சகனின் வேலையை...
அடிமனசு செய்யுதடி...
எழுதுகோலும் எடுக்கவில்லை...
காகிதமும் நிரப்பவில்லை...
ஆனாலும் பதிப்பிக்கிறேன்...
உன் மென்பூ கைகளிலே...
விரல்கள் இசை மீட்டும்...
கைப்பேசி கவி பாடுவதை...!!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (5-Jun-20, 1:37 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 132

மேலே