அவள், நான் தனிமை

அவள் இதயம் என்னுள்ளே
அவளுள் என் இதயம்
இனி தனிமைதான்
என்ன செய்திட முடியும்
அவளை விட்டு பிரிந்து வாழ்ந்தாலும் ......
அவள் இதயம் என்னுள்ளே .....
என்ற இறுமாப்பு ..... என்னுள்....
எப்போது வந்ததோ
உணர்ந்தேன் என்னுள்
அவள் இதயம் இல்லாமல் போனதை

இப்போது நான் அவளைத் தேடி
என் இதயம் ...... அது எங்கே
எதுவும் புரியாதவனானேன்
தனிமை என்னை ஒதுக்கிவிட்டது
தனிமை...... நான் வெறுக்கிறேன் இப்போது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jun-20, 1:55 pm)
பார்வை : 90

மேலே