நகைச்சுவை துணுக்குகள்

என்னங்க அந்தச் சின்ன பையன் அவனோடே வாத்தியாரைக் கல்லாலே அடிச்சிட்டானாமே.

"இளமையில் கல்" லுன்னு அவங்க வாத்தியார் சொன்னதைத் தப்பா புரிஞ்சிக்கிட்டான்.
*******************************

மனைவி: என்ன? நான் பேசப் பேச நீங்கள் கொட்டாய் விடற அளவுக்கு நான் அவ்வளவு அலட்சியமாய்ப் போயிட்டேனா?

கணவன்: நான் கொட்டாய் விடல்லை. நீ பேசும்போது பதில் சொல்ல ஒவ்வொரு தரமும் நான் வாயைத் திறக்கும்போதும் என்னைப் பேச விடாமல் நீயே பேசிக்கிட்டு இருந்தே. நான் வாயைத் திறந்து திறந்து மூடறதைப் பார்த்து நான் கொட்டாய் விடறேன்னு நீ தப்பாப் புரிஞ்சிகிட்டா நான் என்ன பண்றது?
***************
மனைவி: என்னங்க இது? சாப்பிட வந்த இடத்துலே வடநாட்டுத் தாலியா, தமிழ்நாட்டுத் தாலியான்னு கேட்கிறாங்க? என்ன சம்மந்தங்க நாம சாப்பிடறதுக்கும் என்னோடே தாலிக்கும்? நான் எந்தத் தாலி கட்டிக்கிட்டு இருந்தா இவங்களுக்கு என்ன? இந்த மாதிரிக் கேட்டு நம்ம தாலி அறுக்கிறாங்க.

கணவன்: உன்னை மொதமொதலா இந்த மாதிரி ஹோட்டலுக்குக் கூட்டிக்கிட்டு வந்தது தப்பாப் போச்சு. இவங்க கேக்கறது வடநாட்டுச் சாப்பாடா, தமிழ்நாட்டுச் சாப்பாடான்னு. தாலின்னா இங்கே பிளேட் சாப்பாடுன்னு அர்த்தம். இங்கே வரவங்க ஆம்பளையா இருந்தாலும் பொம்பளையா இருந்தாலும் சாப்பாடு கேக்கற ரெண்டு பேருக்குமே தாலிதான்.
***************
என் குழந்தையை ஆராரோ பாடித் தூங்க வெச்சா,
பக்கத்து வீட்டிலே யார்யாரோ பாடி குழந்தையோட தூக்கத்தைக் கெடுத்துடறாங்க.
***********

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (7-Jun-20, 11:07 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 77

மேலே