நகைச்சுவை துணுக்குகள்

உங்க பொண்ணு நல்லாப் பாடுவாளா?
நல்லாவே பாடுவா.
எங்கே பாடச் சொல்லுங்க.
வே...வே.......ஏ.....ஏ.......ஏ.....
என்னங்க இது? நல்லாப் பாடுவான்னு சொன்னீங்க. வே வேன்னு பாடிக்கிட்டு இருக்கா.
நான்தான் அப்பவே சொன்னேனே அவ நல்லா "வே" பாடுவான்னு.
*************************************
தீவிரவாதி: நாங்க 500 பேரையும் ஒரு கழுதையையும் கொல்லப் போறோம்.
நண்பர்: அதென்ன அது ஒரு கழுதை?
தீவிரவாதி: நான் நெனச்சேன். உங்களை மாதிரியே எல்லோருக்கும் அந்த 500 பேரைப் பத்திக் கவலை கிடையாது. அந்த ஒரு கழுதையைப் பத்தித்தான் கவலை.
********************************
பாடகர் குரல்லே கமகம் இருக்கு.
நீங்க தப்பாச் சொல்றீங்க. அவர் வாயிலே சூயிங்கம்தான் இருக்கு.
(கான்டீனுக்காகவே கச்சேரி போறவங்க கிட்டே கமகம் அப்படி இப்படின்னு பேசறது நம்ம தப்புதான்)
********************************

பெரியவர்: உங்க பெண்ணுக்கு 24 வயசு ஆறதுன்னு சொல்றீங்க. பையனைப் பார்க்க ஆரம்பிக்கலையா?
மற்றவர்: அவ ஆரம்பிச்சிட்டாளா இல்லையான்னு எனக்குத்தெரியாது. அவளைத்தான் கேட்கணும்.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (10-Jun-20, 11:18 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 70

சிறந்த நகைச்சுவைகள்

மேலே