548 என்பு இறைச்சி குருதியுடல் இயற்றினோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 6

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கொன்புலாற் சுவரை நீராங்
..குருதிதோய்த் தெழீஇச்சு வேத
என்பெனுங் கழிப ரப்பி
..யிரச்சமா நரம்பால் வீக்கி
ஒன்பது வாயில் விட்டிங்(கு)
..உரியெனுங் கூரை வேய்ந்து
மன்பெற வீடொன் றான்மா
..மன்பெற விசைத்தான் மன்னோ. 6

– தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

முழுமுதல் தலைவன் வலிமைமிக்க இறைச்சியென்னும் மண்ணைக் குருதியாகிய நீரால் குழைத்து எழுப்பி வெண்மையான எலும்பென்னும் கழிகளைப் பரப்பி நரம்பாகிய கயிற்றால் கட்டிஒன்பது வாயில்கள் அமைத்துத் தோலாகிய கூரைவேய்ந்து ஆவிக்குப் பெருமை எய்தும்படி யாக்கை ஒன்று அமைத்தருளினன்.

கொன்-வலிமை. எழீஇ-எழுப்பி. ஒன்பது வாயில்-கண்ணிரண்டு, காதிரண்டு, மூக்கிரண்டு, வாய் ஒன்று, எருவாய் ஒன்று, கருவாய் ஒன்று. உரி-தோல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-20, 7:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

மேலே