உனதினிய நண்பன் - நான் ஓர் திறந்த புத்தகமே - பஃறொடை வெண்பா
பஃறொடை வெண்பா
அட்டையை வைத்துஓர் புத்தகத்தை நல்ஆய்வு
திட்டமாகச் செய்யாதே! என்இதயம் கெட்டியான
மெல்லத் திறக்கும் ஒருபுதிய புத்தகமே!
எல்லாமே எவ்வாறு வாசிக்கி றாயோ
அதுபோலத் தான்உள்ளே பார்,வா சி!காண்பாய்
இதுஉண்மை! என்றும் உனதினிய நண்பன்
பொதுவாகச் சொல்வேனே நான்!