எப்படி சொல்வார்
இல்லாள் இறந்து போனதும்
பிள்ளைகள் இருவரும்
பணி நிமித்தம்
அந்நிய நாட்டில் வாழ்ந்ததும் ,
எண்பது வயதுடைய
பெரியவர் ஆதரவின்றி
அநாதையானதின்
அலங்கோலம்
தெய்வத்தின் கருணையோ
தள்ளாத உடலோடு
தடுமாறும் கால்கள்,
கை நடுக்கமும்
கவலை தரும் மறதியும் தான் ,
எஞ்சிய நாட்கள்
எப்படி போகுமென்று
பெரியவர் கண் கலங்கியதுண்டு
கொரோனா வந்தது
கூடவே ஊரடங்கும்
சேர்ந்து வந்தது—தனிமை
செல்லப் பிள்ளை போல
2 மாதங்கள் வெளியே எங்கும்
செல்லாம வீட்டிலிருக்கக்
கற்றுக்கொடுத்தது
கொரோனா
பாடம் நடத்தியது போல்
பெரியவருக்கு
புரியவைத்து வழிகாட்டி
இப்படித்தான்
இருக்குமென்று
கற்றுக் கொடுத்த அந்த
கொலைகாரப் பாவிக்கு
எப்படி சொல்வார் நன்றி ?