இன்னும் பிறக்காத கவிதை நீ 💘

இன்னும்...
பிறக்காத கவிதையொன்றின்
பிரசவத்திற்காக
கண்களை மூடியபடி
காத்திருந்தேன்
இனிய மாலை பொழுதொன்றில்
ஏரிக்கரையில் நான்.
எங்கிருந்தோ வந்தாய்- நீ..
என்னெதிரே நின்றாய்- பின்
ஏறிட்டுப் பார்த்தாய்.
அக்கணம்!!!
என்றும்...
முண்டியடித்துக்கொண்டு
முன்வரும் வார்த்தையெல்லாம்
உன்னை கண்ட பிறகு- எங்கோ
ஓடி ஒளிந்து கொள்ள...
தந்தி அடிக்கும் மனதுடன்
தலையை குனிந்தபடி - புதிதாக
தரையைக் கீறுகிறேன் கால் விரலால்.
என்ன உணர்விதுவோ
என்னை மயக்கி
ஒவ்வொரு நாளும்
உன்னையே நினைக்கும்
மாய மந்திரத்தை
மறுபடி ஒருமுறை -
எனக்கும் சொல்லித் தருவாயா.?!?!