பூட்டி வைப்பதோ புன்னகைச் செவ்விதழை

பூட்டி வைப்பதோ புன்னகைச் செவ்விதழை
தாள் திறவாயோ மூடிய இமைக்கதவை
விடியலின் வாசலைத் திறந்து கதிரவனும் வந்துவிட்டான்
மொட்டுக்கள் மடல் அவிழ்ந்து சிரிக்கத் தொடங்கி விட்டன
தயக்கம் என்னவோ தயை செய்யாயோ தமிழ்த் தென்றலே !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-20, 12:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே