கவிஞனுக்கு கிரஹண தோஷங்கள் இல்லை

எழுதுகிற கவிஞனுக்கு
கிரஹண தோஷங்கள் இல்லை
கதிரும் நிலவும் கவிதைகளாய் விரியும்
இதயத் தோட்டத்தில் எண்ணங்கள்
வண்ணப் பூக்களாய் மலரும்
எழுத்து வீதியில் பவழமல்லிப் பூக்களாய் பாய்விரிக்கும்
ஆதவனும் சந்திரனும் ஒன்றையொன்று மறைக்கும்
ஆகாய வினோத லீலைகளில்
அறிவியல் காரனுக்கும் சோதிடக் காரனுக்கும் கொண்டாட்டம் !
அந்தியின் சொந்தங்களுக்கு ஆகாய வண்ண மாற்றமெல்லாம்
சந்தங்கள் பாடும் கவிதைகளே !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-20, 9:28 am)
பார்வை : 49

மேலே