புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 3---

புத்தன் வீட்டுப் பூக்கள் - 3

21. எல்லாருக்கும் நல்லவனாய் இருக்க ஆசைப்பட்டால்
பொய்யைச் சொல்லி நடித்தே ஆக வேண்டும்.

22. நேர்மையாக இருந்தால் நெருங்கிய உறவும் தூரமாகவே இருக்கிறது.

23. கட்டாயப் படுத்துவதின் மூலம் நல்ல குணங்களை மனதினில் விளைவிக்கவே முடியாது.

24. நீ யாரை வெறுக்கிறாயோ?... அவரையே அதிகம் நினைக்கிறாய்.

25. உயிர் இரண்டும் ஒன்றிவிட்டப் பின் உள்ளம் தான் சுவை மொட்டுகள்.

26. உன் எதிரியின் பலத்தை ஒத்துக் கொள்ளும் வரை
நீ வெற்றி பெற வழி கிடைக்காது.

27. ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது தான் எதிர்காலத்தின் பயம் தொடங்குகிறது.

28. தண்ணீர் குடிக்கும் இன்றைய மனிதர்கள்
வறண்ட நிலத்தில்
இரத்தம் குடிக்கும் நாளைய பேய்கள்.

29. இதழ் நழுவி விழுந்த சில சொற்களில்
நெருங்கிய இதயங்கள் நொருங்கிப் போகக் கூடும்.

30. மனித போர்வைக்குள் மிருகங்களே அதிகம் எட்டிப் பார்க்கிறது.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (21-Jun-20, 11:16 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 112

மேலே