என் தந்தை என் தாய் தான்1
என் தாய் தவறு என்று
இரண்டாம் தாரம் தேடினான்
ஒரு கயவன்.
நரகம் விட்டு தப்பினோம்
நானும் அந்த பெண் தேவதையும்..
கயவனோ
குப்பை என்று சொன்ன தேவதை
எனக்காய் குப்பையள்ளி
என் இரைப்பை நிரப்பினாள்.
காயம் பட்ட கையுடன்
அள்ளி அள்ளி அமுதமாய்
சோறும் ஊட்டினாள்..
பட்டகடன் தீர்கவே
பாவம் அவள் பாத்திரமும்
பட்டபகலில் விளக்கினாள்..
மூக்கொழுகி நானழுக
முத்தமிட்டு தொட்டனைத்தாள்.
ஊரார் என்னை பழிக்கும் போது
ஊராரை உதறினாள்.
வாழ வழியில்லை என்றாலும்
வழியொன்று அவள் வகுத்தாள்.
இப்போது கூறுங்கள் யார்
என் தந்தை..