நகைச்சுவை துணுக்குகள் 10

கம்பெனி ஆபீஸர்: என்னய்யா இது? என்ன பண்ணியிருக்கே?

புதிதாக வேலைக்குச்சேர்ந்தவர்: நீங்க தானே சார் கேட்டீங்க குறைஞ்சது மூணு கொடேஷனாவது வேணும்னு. அதான் நான் அஞ்சு கொடேஷன் கொடுத்திருக்கேன் சார். ஷேக்ஸ்பியரிலே இருந்து ஒண்ணு, ஜான்ஸனோடே கொடேஷன் ஒண்ணு...

க. ஆபீஸர்: நிறுத்து. உன்னை நம்ம ஆபீஸுக்கு வேண்டிய ஸ்டேஷனரிக்கு கொறஞ்சது மூணு கொடேஷனாவது வாங்கச் சொன்னா ஷேக்ஸ்பியர், ஜான்ஸன்னு சொல்லிக்கிட்டு இருக்கே. இதை யாரையா கேட்டா?

கம்பெனி அஸிஸ்டண்ட்: அது தாங்க டிரபிள், காலேஜூலே இருந்து நேரா நாம வேலைக்கு ஆட்களை எடுத்தா.
***************

சௌகரியமாக இருக்கற தன் வீட்டை எதுக்காக அவர் விக்கிறாரு?

தன் பையனைப் படிக்க வெக்கறதுக்காக.

எதுக்காக பையனைப் படிக்க வெக்கறாரு?

அவன் நாளைக்கு ஒரு வீடு வாங்கி சௌகரியமா இருக்கத்தான்.
**************

என்னோட மனைவியோட பல்லைப் பிடுங்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார்.

அதனால என்ன? பல்லைப் பிடுங்கிட வேண்டியதுதானே.

இல்லே. அவளோடே நாக்கைப் பிடுங்கணும்னு சொல்லி இருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன்
****************
உனக்கு கிளாஸ் எடுக்கற ப்ரொஃபஸர் பேர் என்ன?

இன்னும் நாங்க அவருக்குப் பேர் வெக்கலை!
*************

எழுதியவர் : ரா.குரிசுவாமி ( ராகு) (22-Jun-20, 1:26 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 53

மேலே