அடர் மழை
நீளம் நீளமாய்
அடர் மழை
கோடுகள்
மண்ணில் குத்தி
புள்ளி வைத்து
வழிந்தோடுகிறது
வண்ண வண்ண
குடைகள்
கீழே விழும்
மழை கோடுகளை
தடுத்து
தெறித்து விழும்
சிதறல்களாய்
மண்ணில்
வழிந்தோடுகிறது
மல்லாந்து இருக்கும்
பச்சை இலைகள்
மழை கோடுகளை
மார்பில் வாங்கி
முதுகு வழியாக
மண்ணில் வழிந்தோடுகிறது
சுவர் குடையின்
கீழிருக்கும்
வரிசையான
ஜன்னல்களும்
கதவுகளும்
மழை கோடுகளை
தன்னுள் வாங்கி
உள்ளும் வெளியுமாய்
மண்ணுக்குள்
வழிந்தோடுகிறது