நினைவு தினம்

மறைந்தாலும் நிலைத்திருக்கும்
தன்னலமற்ற தலைவர்களின்
திருவுருவச் சிலைகளையே
தெருமுனையில் நிலைநிறுத்தி
ஆண்டுக்கொரு நாளில்வந்து
மாலையிட்ட மறுகணமே
மாய்ந்தவரின் மொழிதன்னை
மறந்துபோகும் திறன்படைத்த
தலைவர்கள்
வாழும்போதே விக்கிரகமாய் மாறிப்போகும்
பணங்குவிக்கும் குணமிருக்கும்
நிலையுடைய கொடியவரே!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 1:10 pm)
பார்வை : 36

மேலே